Your Ad Here

கூலிப்படையை :அனுப்பி தாக்குதல் நடத்தினார்: அஜீத்தை கைது செய்ய வேண்டும்; ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேட்டிhttp://i50.tinypic.com/s2cjms.jpgசினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் (வயது 48). எம்.ஜி.ஆர். நகரில் உள்ள இவரது வீட்டில் நேற்று அதிகாலையில் ஒரு கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் அடித்து நொறுக்கப்பட்டது.இது தொடர்பாக நேற்று மாலையில் ஜாக்குவார் தங்கம், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் கொடுத்தார். துணை கமிஷனர் பெரியய்யா, உதவி கமிஷனர் பரந்தாமன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அஜீத்குமார் மன்ற தென் சென்னை மாவட்ட செயலாளர், அஜீத்தின் உதவியாளர், மேலாளர் உள்ளிட்ட மன்ற நிர்வாகிகள் 15 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 506 (2) ஐ.பி.சி. கொலை மிரட்டல் 147, 148, 448, 294-பி ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் அஜீத் குமாரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தாக்குதல் நடந்தது பற்றி ஜாக்குவார் தங்கம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நேற்று அதிகாலை எனது வீட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் நேரடியாக புகார் தெரிவித்தேன். இது வரையில் அஜீத்குமார் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

மலையாள நடிகர் ஜெயராம் வீட்டில் சீமான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் டைரக்டர் சீமான் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வடிவேலு வீடு தாக்கப்பட்டபோது விஜயகாந்த் மீதும் வழக்கு போட்டார்கள். ஆனால் ஒரு தமிழனான எனது வீட்டில் பிழைப்பு தேடி இங்கு வந்துள்ள அஜீத்குமாரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த விவகாரத்தில் மட்டும் போலீசார் மெத்தனமாக செயல்படுவது ஏன் என்று தெரியவில்லை. என் வீட்டில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து தமிழ் ஆர்வலர்கள் பலர் என்னுடன் போனில் தொடர்பு கொண்டு ஆலோசித்து வருகிறார்கள். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று மாலையில் முடிவு செய்ய உள்ளேன். அதே நேரத்தில் அஜீத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யா விட்டால் மிகப்பெரிய போராட்டத்தில் நான் இறங்குவேன்.

அஜீத் தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது. தமிழ் உணர்வாளர்கள் அவரை வெளியில் நடமாட விட மாட்டார்கள்.

சினிமாவில் ஹீரோவாக இருக்கும் அஜீத் என் விஷயத்தில் வில்லனாக மாறி கூலிப்படையை அனுப்பி தாக்குதல் நடத்தி உள்ளார். இது மிகவும் கோழைத்தனமானது. அடுத்த கட்டமாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், டைரக்டர் சீமான் ஆகியோரை சந்தித்து பேச உள்ளேன். மீண்டும் ஒருமுறை போலீஸ் கமிஷனரை சந்தித்து அஜீத் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளேன். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்குமாறு முதல்-அமைச்சரை சந்தித்தும் முறையிட உள்ளேன். அவரை சந்திப்பதற்காக நேரம் கேட்டுள்ளேன். இது சம்பந்தமாக பேச நடிகர் சங்க தலைவர் சரத்குமார் என்னை அழைத்துள்ளார். இன்று அவரை சந்திக்க உள்ளேன்.

நடிகர் சங்கம், ஸ்டண்ட் யூனியன், பெப்சி அமைப்பு களிலும் அஜீத்குமார் மீது புகார் செய்ய உள்ளேன்.

உலகம் முழுவதிலும் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட தமிழக மாணவர்கள் மீது ஆந்திராவில் தாக்குதல் நடந்துள்ளது. இன்று தமிழ்நாட்டில் ஒரு தமிழனுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. என் வீட்டில் நடந்த தாக்குதலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிய வில்லை. நான் இயல்பாகவே மென்மையானவன். நான் வெகுண்டெழுந்தால் அது வேறு விதமாக இருக்கும்.

எனவே விரைவில் எனக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழ் உணர்வாளர்களுடன் கலந்து பேசி தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் இது போன்ற தாக்குதல்களுக்கு முடிவு கட்ட உள்ளேன்.

கேள்வி:- அஜீத் கூறிய கருத்துக்கு ரஜினி ஆதரவு தெரிவித்து உள்ளாரே?

பதில்:- ரஜினி ஒரு காமெடியர். தமிழ்நாட்டில் இருக்கும்போது தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவார். கர்நாடகா சென்று விட்டால் அங்குள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுவார். இரண்டு மாநில மக்களிடமும் மன்னிப்பும் கேட்பார். திடீரென இரட்டை விரலை காட்டி இரட்டை இலைக்கு ஓட்டு போடச் சொல்லுவார். எனவே ரஜினி பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

இவ்வாறு ஜாக்குவார் தங்கம் கூறினார்

0 comments:

new movies

Your Ad Here