பிரபுதேவா நடித்த படமாக இருந்தாலும், இயக்கிய படமாக இருந்தாலும் கலெ*க்சனில் சாதனைப் படைத்த படம், அவரது புதிய படமான, வான்டட்.
போக்கி*ரி படத்தின் *ரீமேக்கான வான்டட் வெளியான நாள்முதல் இந்தியில் பட்டையை கிளப்பி வருகிறது. உள்நாட்டில் மட்டும் அதாவது இந்தியாவில் மட்டும் இப்படம் முதல் இரு வாரங்களில் 18 கோடியை தாண்டியுள்ளது.
ஆடியோ உ*ரிமை, தொலைக்காட்சி ஒளிபரப்பு உ*ரிமை, டிவிடி உ*ரிமை மற்றும் வெளிநாட்டு உ*ரிமை என்று மேலும் பல கோடிகள் இதில் சேர்த்தியில்லை.
முதல் வாரத்தில் இந்தியாவில் 11,17,82,697 ரூபாயை இப்படம் வசூலித்தது. இரண்டாவது வார வசூல், 7,73,48,532 ரூபாய். மொத்தம் 18,91,31,229 ரூபாய். டல்லடித்த சல்மான் கானின் மார்க்கெட்டை பிரபுதேவாவின் படம் தூக்கி நிறுத்தியிருக்கிறது.
இந்தப் படத்தின் வெற்றி கோடிகளில் சம்பளம் வாங்கும் இயக்குனர்களின் பட்டியலில் பிரபுதேவாவையும் சேர்த்திருக்கிறது
0 comments:
Post a Comment