அசல் – திரை விமர்சனம்
கிளாடியேட்டர் என்றொரு படம். ராஜா தன் மகனை நம்பாமல் தளபதியிடம் பொறுப்புகளை ஒப்படைப்பார். அது தெரிந்த மகன் தந்தையை கொன்றுவிட்டு, தளபதியின் குடும்பத்தை அழித்துவிட்டு, தளபதியை ஒரு கிளாடியேட்டராய் அலைய விட்டுவார். மகனின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்த தளபதி எப்படி ஆட்சியை பிடிக்கிறான் என்பதுதான் கிளாடியேட்டர் கதை.
அப்பா அஜித் தன் மனைவிக்கு பிறந்த மகன்களை நம்பாமல், கீப்புக்கு பிறந்த மகனான அஜித்திற்கு சொத்தை எழுதி வைத்துவிட, அஜித்தின் பாசத்தை புரிந்து கொள்ளாமல் அவரிடம் உதவியை பெற்றுக் கொண்டு அவரையே கொன்றுவிட, எப்படி அஜித் வெற்றி பெறுகிறார் என்பதே அசலின் கதை.
படம் முழுக்க ப்ரான்சிலும், மலேசியாவிலும் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆல்மொஸ்ட் ஒரு ஜேம்ஸ் பாண்ட் பட டைப்பில் ஒரு ஆக்ஷன், சேசிங் என்று ஆரம்பிக்கிறது படம். சேசிங் முடிந்தது, ஜேம்ஸ்பாண்ட் பட ஸ்டைலிலேயே சமீரா ஒரு பாட்டூ பாடுகிறார். அஜித்தின் அறிமுகமும், அதற்கான பில்டப்புகளும் அஜீத்தின் ஸ்கிரீன் ப்ரெசென்சும் அட்டகாசம், பல காட்சிகளில் பில்லாவின் தாக்கம் அதிகம்.
அஜித், படம் முழுக்க வியாபித்திருக்கிறார். நிஜமாகவே அந்த சிகார் பிடிக்கும் ஸ்டைலும், சண்டைக்காட்சிகளில் இருக்கும் கேசுவலான பாடி லேங்குவேஜும் நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் அவரின் காஸ்ட்யூமும், ஸ்டைலிஷான ஹேர்ஸ்டைலும், அதிகம் பேசாத சின்ன, சின்ன பாடி லேங்குவேஜுலும் கலக்குகிறார். ஹைஸ்பீடில் அடிக்கடி நடக்கும்போது எரிச்சல் வராமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
பிரான்ஸில் அஜித்தின் நிழலாய் சமீரா ரெட்டி. கொஞ்சம் மெலிந்து இன்னும் க்யூட்டாக இருக்கிறார். சில காட்சிகளில் அழகில்லாமல் இருக்கிறார். நடிப்பதற்கு பெரிதாக ஏதும் வாய்பில்லை. பாவனா வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின் போல் ஒரு லூசுப் பெண்ணாய் அறிமுகமாகி நெடுக அதே போல் நடிக்கிறார்.
வில்லன்களாக சம்பத், ராஜிவ் கிருஷ்ணா, பிரதீப் ராவத், கெல்லி. இதில் கெல்லியை தவிர மற்றவர்கள் ரொம்பவே சோப்ளாங்கி வில்லன்கள். யூகிசேது அபூர்வ சகோதரர்கள் ஜனகராஜ் ரேஞ்சில் ஒரு டான் கேரக்டரை செய்திருக்கிறார். ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். பழைய ஹீரோ சுரேஷ் பிரெஞ்சு போலீஸாய் வில்லன்களில் ஒரு ஆளாய் வருகிறார். க்ளைமாக்ஸில் அவர் அப்படியே குண்டு கட்டாய் மாறுவது படு பழைய சினிமா.
கதை, திரைக்கதை, வசனத்தில் அஜித்குமாரின் பெயரும் சரண், யூகிசேதுவுடன் போடப்படுகிறது. அஜித் ஒரு அஸிஸ்டெண்ட் டைரக்டராகவும் பணியாற்றி இருக்கிறார். யூகிசேது, அஜித் காம்பினேஷன் ஏற்கனவே வில்லன் பட ஹிட்டடித்திருப்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. ஆனால் திரைக்கதையில் இரண்டாவது பாதியில் மொக்கை வில்லன்களால் பெரிதாய் ஏதும் ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை என்பது வருத்தமே. முழுக்க,முழுக்க அஜித்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கிறபடியால் மற்ற விஷயங்களில் கவனக்குறைவு அதிகம்.
பிரசாந்தின் கேமரா, பிரான்ஸையும், மலேசியாவையும், கண் குளிர அழகாய் படமெடுத்திருக்கிறார். ஆரம்ப சேஸிங் காட்சியாகட்டும், மும்பை கடலோர போட் துரத்தலாகட்டும் நச். பல இடங்களில் இவரது அழகான பிரேமிங்கினால் படம் தொய்வில்லாமல் தெரிகிறது என்றால் அது மிகையில்லை.
ஆண்டனியின் எடிட்டிங் நச். மிக ஸ்டைலிஷான ஒரு எடிட்டிங். சண்டை காட்சிகளில் இவரது எடிட்டிங் தான் அஜித்தை தூக்கி நிறுத்துகிறது. பரத்வாஜின் இசையில் ‘துஷ்யந்தன்” பாட்டை தவிர, பெரிதாய் எதுவும் மனதில் நிற்கவில்லை. கமினே “டொட்டடய்ங்”கை லவட்டி ஒரு ட்யூனை போட்டுவிட்டார்.பிண்ணனி இசை ஒன்றும் சொல்லிக் கொள்கிறார் போல் இல்லை.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சரண். ரிச்சான லொக்கேஷன், அஜித், சிவாஜி ப்ரொடக்ஷன் என்று எல்லாமே கிடைத்திருக்கும் பட்சத்தில் இன்னும் கொஞ்சமேனும் மெனக்கெட்டிருக்கலாம். டெக்னிகலாய் படம் நன்றாக இருந்தாலும், உள்ளடக்க கதையும், திரைக்கதையும் பழசாய் இருப்பதால் விறுவிறு என போக வேண்டிய படம் ப்ளாட்டாக போகிறது. அதிலும் க்ளைமாக்ஸ் மனோகரா சீன் எல்லாம் கொஞ்சம் ஓவர்தான். இதையெல்லாம் மீறி அஜித்தினாலும், ப்ரசெண்டேஷனாலும், எரிச்சல் வராமல் இருக்கிறது என்பது உண்மை. அஜித்துக்கான சரியான ரீமேக் படத்தை சொல்கிறேன் முடிந்தால் அடுத்த படமாய் அதை எடுக்கலாம் ஹிந்தி படமான “ரேஸ்”
0 comments:
Post a Comment